ஜனாதிபதியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பு

டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மத்திய மந்திரி அமித்ஷா கடந்த 13-ந்தேதி சந்தித்து பேசினார்.
ஜனாதிபதியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று நேரில் சந்தித்து பேசினார்.

இதுபற்றிய புகைப்படம் ஒன்றை ஜனாதிபதி அலுவலகம் எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்டு உள்ளது. அந்த பதிவில், மத்திய உள்விவகாரம் மற்றும் கூட்டுறவு துறை மந்திரி அமித்ஷா, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, நேரில் சந்தித்து பேசினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 13-ந்தேதி, டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மத்திய மந்திரி அமித்ஷா, சட்டம் மற்றும் நீதி துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஆகியவற்றுக்கான மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அதுபற்றிய புகைப்படம் ஒன்றை ஜனாதிபதி அலுவலகம் அப்போது வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், மத்திய மந்திரி அமித்ஷாவின் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com