

சத்தர்பூர்
சத்தர்பூர் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் உமா பாரதி கலந்து கொண்டார். அங்கு தலித்துகளுடன் அவர் உணவருந்தாமல் சென்று விட்டார். தன்னுடன் உணவருந்தியவர்களை சுத்தபடுத்த நான் கடவுள் ராமர் இல்லை என கூறி உள்ளார். பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார் உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது தனக்கு தெரியாது என கூறினார்.
இரண்டு நாட்கள் முன்பு தாத்ரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ.க மூத்த தலைவர் உமாபாரதி, நான் என்னை இறைவன் ராமனாக கருதவில்லை அவர் போன்ற சமூக உணவருந்த பங்கேற்க முடியாது, ராமர் உணவு உண்டு மக்களைத் தூய்மைப்படுத்தினார்.
நான் இதற்கு ஆதரவு என்றாலும் சாப்பிடுவதற்கு தலித்துகளின் வீடுகளுக்கு நான் செல்லமாட்டேன், அதற்கு பதிலாக, தலித்துகளை எனது வீட்டிற்கு உணவருந்த அழைக்கிறேன் என கூறினார்.
உங்களுடன் ஒரு ரகசியத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் சமரஸ்த போஜ்ஜில் பங்கேற்க மாட்டேன் (சமுதாய சாப்பாடு), ஏனெனில் நான் இறைவன் ராமனாக கருதவில்லை, அவர் சப்ரியின் வீட்டிற்கு சென்று தலித்துகளை சுத்தபட்டுத்தினார் என ராமாயணத்திலிருந்து புராண அத்தியாயத்தை குறிப்பிட்டார்.
நான் அவர்களோடு உட்கார்ந்தால், அவர்கள் சுத்திகரிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் சமையலறையில் உட்கார்ந்தால், நாம் பரிசுத்தமாக்கப்படுவோம் என கூறினார்.
டெல்லிக்கு வாருங்கள் ... என் மருமகன் அவரது மனைவி உங்களுக்காக உணவை தயாரிப்பார், நான் உங்களுக்கு உணவை பரிமாறுவேன், நீங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு, என்னை வாழ்த்துங்கள் என கூறினார்.
நான் என் இடத்திற்கு உங்களை அழைக்கிறேன், ஆனால் உங்களுடன் உண்ண முடியாது, ஏனென்றால் நான் ஏற்கெனவே எடுத்துவிட்டேன். நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களுடன் இருக்கிறேன், எப்போதும், "என்றார்