

புதுடெல்லி
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்த 2 வாரங்களில், நாட்டின் எல்லை பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு விசயங்களை ஆய்வு செய்கிறார். அப்போது அவர், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மூத்த எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) அதிகாரிகள் ஆகியோருடன் உரையாட உள்ளார்.
இதன்படி, அவர் பிகானீர் பகுதிக்கு இன்று செல்கிறார். அவர் எல்லை பாதுகாப்பு பற்றி, மூத்த அதிகாரிகளுடன் சேர்ந்து மறுஆய்வு செய்வார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் மற்றும் பாகிஸ்தானுடன் எல்லையை பகிரக்கூடிய 5 மாவட்டங்களை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கு பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்பின்னர், சஞ்சு பகுதியிலுள்ள பி.எஸ்.எப். எல்லை முகாம் பகுதிக்கு நாளை செல்ல இருக்கிறார்.