மத்திய மந்திரி அமித்ஷா கோவாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

கோவா தலைநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. அலுவலகத்தை அமித்ஷா திறந்து வைக்க உள்ளார்.
மத்திய மந்திரி அமித்ஷா கோவாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
Published on

பனாஜி,

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை மந்திரி அமித்ஷா, கோவாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக நாளை அவர் கோவா செல்ல உள்ளார்.

கோவாவின் தலைநகர் பனாஜிக்கு அருகே உள்ள சிம்பெல்(Chimbel) பகுதியில், ஆளுங்கட்சியான பா.ஜ.க.விற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அமித்ஷா திறந்து வைக்க உள்ளார்.

தொடர்ந்து அன்றைய தினமே பா.ஜ.க மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியக் குழு உறுப்பினர்களையும் அமித்ஷா சந்திக்க உள்ளார். பின்னர் திங்கட்கிழமையன்று கோவாவில் மத்திய மந்திரி அமித்ஷா, அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com