ரத்தன் டாடா உடலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா அஞ்சலி

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ரத்தன் டாடா உடலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா அஞ்சலி
Published on

புதுடெல்லி,

பிரபல இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரத்தன் டாடாவின் உடல்மீது இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது. அவருடைய உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது.

ரத்தன் டாடாவின் உடலுக்கு மராட்டிய அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று மராட்டிய முதல்-மந்திரி அறிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு, மத்திய அரசு சார்பில் உள்துறை மந்திரி அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் மத்திய மந்திரி பியூஷ் கோயல், மராட்டிய மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com