கேரளா: பத்மநாபசுவாமி கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்


கேரளா: பத்மநாபசுவாமி கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்
x

மத்திய உள்துறை மந்திரியும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.

திருவனந்தபுரம்,

மத்திய உள்துறை மந்திரியும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார். ஒருநாள் பயணமாக கேரளா சென்றுள்ள அமித்ஷா இன்று திருவனந்தபுரத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அமித்ஷாவுக்கு பத்மநாபசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாமி தரிசனத்திற்குப்பின் பேசிய அமித்ஷா, திருவனந்தபுரம் மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்க வந்ததாக கூறினார். மேலும், பாஜக நிர்வாகிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார். பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித்ஷா இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

1 More update

Next Story