பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

முன்னதாக பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
Published on

புதுடெல்லி,

மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பிரக்ஞானந்தாவுடன் அவரது பெற்றோர்களும் சென்றிருந்தனர்.

பிரக்ஞானந்தாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர்,"நான் அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறார். 16 வயதிலேயே மற்றவர்களால் செய்ய முடியாததை அவர் செய்து காட்டியிருக்கிறார். பல்வேறு இளைஞர்கள் இவரை பார்த்து செஸ் விளையாட ஆர்வம் பெறுவர். என்று தெரிவித்தார்.

முன்னதாக பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com