மத்தியபிரதேச தேர்தல்: மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் வெற்றி

பாஜக வேட்பாளரான நரேந்திர சிங் தோமர் 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மொரேனா,

நவம்பர் 17-ஆம் தேதி அன்று நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டசபை திமானி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்றது. முன்னதாக மத்திய பிரதேச தேர்தலில் மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் பலரையும் பா.ஜனதா களமிறக்கி இருந்தது. இதில் மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் முக்கியமானவர்.

மொரேனா மாவட்டத்தின் திமானி தொகுதியில் போட்டியிட்ட அவர், தனக்கு அடுத்ததாக வந்த பகுஜன் சமாஜ் வேட்பாளர் பல்வீர் சிங் தண்டோட்டியாவை விட 24 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமரின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com