மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நெருக்கடி முற்றிய நிலையில் மத்திய மந்திரி ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா!
Published on

புதுடெல்லி,

'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மோடி உறுதி

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்துக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். கனிமொழி தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செய லாளர் டி.ராஜா, பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நேற்று முந்தினம் முந்தினம் ஆதரவு தெரிவித்தனர். வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் மத்திய அரசுக்கும் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் பங்கேற்றனர்.

மந்திரி மந்திரி ராஜினாமா

இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், "கடந்த 10 நாட்களாக நடக்கும் சம்பவங்களைப் பார்த்து மனம் கலங்கிப் போயுள்ளேன்.

பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் தடைகளை உருவாக்கவும் மாணவர்களைத் தவறாக வழிநடத்தவும் முயன்றனர். இச்செயல் எனக்கு ஆழ்ந்த மனவேதனையை அளித்தது. இந்தியாவின் இளைஞர் சக்தியே நாட்டின் உண்மையான பலம்.நாட்டின் இளைஞர்கள் குழப்ப வலையில் சிக்கிக்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

தேசவிரோதிகள்

இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது நம் கடமை. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இளைஞர் சக்தியை சதிவலையில் சிக்க விடமாட்டோம். தற்போதைய சூழலை "தேசவிரோதிகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

பிரதமரின் வழிகாட்டுதல், நம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்கள், அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மற்றும் நான் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற அனைத்து நபர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேச சேவை எனது வாழ்வின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். அதற்காக நான் என்றென்றும் அர்ப்பணிப்புடன் இருப்பேன்” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

இதுவே முதல்முறை

பிரதமர் மோடி அரசின் வரலாற்றில் போராட்டங்களுக்கு பணிந்து மத்திய மந்திரி பதவி விலகுவது இதுவே முதல்முறை எனபது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com