மத்திய மந்திரி குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்: மருத்துவமனையில் அனுமதி

மத்திய மந்திரி குமாரசாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மந்திரி குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்: மருத்துவமனையில் அனுமதி
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மத்திய மந்திரியும், ஜேடி (எஸ்) தலைவருமான ஹெச்.டி.குமாரசாமிக்கு, திடீரென மூக்கில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து குமாரசாமியை அவரது மகன் நிகில் குமாரசாமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குமாரசாமிக்கு ஏற்கனவே இதய பிரச்சனை இருப்பதாகவும், அவருக்கு 2 முதல் 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக மூடா ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக பா.ஜனதா மற்றும் ஜேடி(எஸ்) தலைவர்கள் பெங்களூரில் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் ஹெச்.டி.குமாரசாமியுடன் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com