ஒடிசாவில் கார் மீது டிராக்டர் மோதியதில் மத்திய மந்திரி காயம்

ஒடிசாவில் மத்திய மந்திரி பிரதாப் சாரங்கி சென்ற கார் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
ஒடிசாவில் கார் மீது டிராக்டர் மோதியதில் மத்திய மந்திரி காயம்
Published on

பாலசோர்,

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பொடாசுலி பகுதியருகே மத்திய மீன்வள இணை மந்திரி பிரதாப் சாரங்கி காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், அவரது கார், டிராக்டர் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், காரின் முன்புறம் லேசாக சேதமடைந்தது.

இந்த விபத்தில் காயம் அடைந்த மத்திய மந்திரி உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com