

டாக்கா,
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக இன்று (திங்கட்கிழமை) 2 நாள் பயணமாக வங்காளதேசம் செல்கிறார். கள்ளத்தனமாக குடியேறுதல், இரு நாடுகளிடையே இணைப்பு வசதி, ரோகிங்யா பிரச்சினை, 54 ஆறுகளின் நீர்பங்கீடு ஆகிய பிரச்சினைகள் குறித்து அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி அப்துல் மேமனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பின்னர் அவர் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் சந்தித்து பேசுகிறார்.