9-வது இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்க மொரீசியஸ் சென்றடைந்த மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இரு நாடுகளிடையே, மண்டல பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தொடர்ச்சியான உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9-வது இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்க மொரீசியஸ் சென்றடைந்த மத்திய மந்திரி ஜெய்சங்கர்
Published on

போர்ட் லூயிஸ்

மொரீசியஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக மொரீசியசுக்கு இன்று சென்றடைந்து உள்ளார்.

அந்நாட்டின் போர்ட் லூயிஸ் நகரில், மொரீசியசுக்கான வெளிவிவகாரம், மண்டல ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக மந்திரி தனஞ்ஜெய் ராம்புல் அவரை வரவேற்றார். இதற்காக அவருக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.

இந்த 2 நாள் பயணத்தில், இரு நாடுகளிடையே, மண்டல பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தொடர்ச்சியான உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, கடல்சார் பாதுகாப்பு மற்றும் மண்டல ஸ்திரத்தன்மை ஆகியவை பற்றி விவாதிப்பதற்கான 9-வது இந்திய பெருங்கடல் மாநாட்டிலும் அவர் பங்கேற்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com