உலகிலேயே கடுமையான விமர்சனங்களை இந்திய பாதுகாப்பு படை எதிர்கொள்கிறது: மத்திய மந்திரி

உலகிலேயே கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள கூடிய நிலையில் இந்திய பாதுகாப்பு படை உள்ளது என மத்திய மந்திரி தர்மேந்திரா கூறியுள்ளார்.
உலகிலேயே கடுமையான விமர்சனங்களை இந்திய பாதுகாப்பு படை எதிர்கொள்கிறது: மத்திய மந்திரி
Published on

கோவாவின் பனாஜி நகருக்கு அருகே வாஸ்கோ நகரில் இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல் ஷவுரியா நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இதனை தொடங்கி வைத்த பின் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை இணை மந்திரி தர்மேந்திரா பிரதான் பேசும்பொழுது, இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆரம்பத்தில் அரசியல்வாதிகள் விமர்சனத்திற்கு உள்ளானார்கள். ஆனால் தற்பொழுது, ராணுவம், கப்பற்படை, கடலோர காவல் படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை ஆகியவை விமர்சனத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்திய பாதுகாப்பு படைகளை விமர்சனம் செய்பவர்கள் அவர்களின் திறமையை பற்றி அறிவதில்லை. அவர்களின் தியாகங்களை பற்றி அறியாதவர்களே மோசம் நிறைந்த விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். நமது படையினர் ஒவ்வொரு நாளும் தங்களது வாழ்வை ஆபத்து நிறைந்த சூழலிலேயே கழிக்கின்றனர். அதனால் நமது இல்லங்களில் நாம் நிம்மதியுடன் உறங்குகிறோம் என கூறியுள்ளார்.

நம்முடைய பாதுகாப்பு படையினரை பற்றி புரிந்து கொள்ளாமல், மதிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசத்திற்கு உரியது. அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அதற்கு காரணமும் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com