மராட்டியத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்

மராட்டிய மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.
மராட்டியத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்
Published on

மும்பை,

மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே பால்கர் மாவட்டம் விக்ரம்காட் பகுதியில் பழங்குடியின மக்கள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றா. இது குறித்து அவர் பேசியதாவது:-

அடுத்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது சாதி விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அப்போது தான் மொத்த தொகையில் எவ்வளவு இருக்கிறாம் என்பது மக்களுக்கு தெரியவரும். சாதிய பாகுபாடை அதிகரிப்பது இதன் நோக்கம் கிடையாது.

மற்ற சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மராத்தாக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க இந்த நடவடிக்கை உதவும். எந்தவித வருவாயும் இல்லாதவர்களுக்கு அரசு 5 ஏக்கர் நிலம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் மாநில, மாவட்ட தலைமையகங்களில் இந்திய குடியரசு கட்சி வரும் 25-ந் தேதி போராட்டத்தில் ஈடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com