

மும்பை,
கேரளாவில் கண்டறியப்பட்ட ஜிக வைரஸ் பாதிப்பு, மராட்டிய மாநிலத்திலும் கண்டறியப்பட்டது. கொசுக்களின் மூலமாக பரவும் இந்த ஜிகா வைரஸ் பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும்.'
ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. கர்ப்பிணிகளுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படலாம்.
இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ் பாதிப்பு புனேவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மராட்டிய மாநிலத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் குழு பலதரப்பட்ட குழு விரைந்துள்ளது. மாநிலத்தில் ஜிகா வைரஸ் நிலவரத்தை கண்காணிக்கவும் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மாநில அரசுக்கு உதவும் பணியை இந்தக் குழு செய்ய உள்ளது.