செந்தில் பாலாஜி நீக்கத்துக்கு ஐக்கிய ஜனதாதளம் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கத்துக்கு ஐக்கிய ஜனதாதளம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாட்னா,

தமிழக அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி கவர்னர் நேற்று உத்தரவிட்டார். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.

கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் நீரஜ்குமார் கூறுகையில், 'செந்தில் பாலாஜி மீது மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் பதிவு செய்துள்ள வழக்குகளில் அவர் இன்னும் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது அவரது பதவிநீக்கம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது' என குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி உள்பட பல மந்திரிகள் மீது வியாபம் ஊழல் வழக்குகள் இருக்கும்போது, அங்கு ஏன் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com