மனைவிக்கு தெரியாமல் படுக்கையறை காட்சியை வெளியிட்ட என்ஜினீயர் கைது லேப்–டாப் மூலம் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பினார்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஜேடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் 33 வயதான கம்ப்யூட்டர் என்ஜினீயர். அவரது மனைவியும் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
மனைவிக்கு தெரியாமல் படுக்கையறை காட்சியை வெளியிட்ட என்ஜினீயர் கைது லேப்–டாப் மூலம் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பினார்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஜேடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் 33 வயதான கம்ப்யூட்டர் என்ஜினீயர். அவரது மனைவியும் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். அந்த பெண்ணின் கேரளாவை சேர்ந்த தோழி ஒருவர், உனது படுக்கையறை ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்தார்.

உடனே அந்த பெண் இதுபற்றி ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், அந்த வீடியோ தொடர்பின் (வீடியோ லிங்க்) ஐ.பி. முகவரி கேரள மாநிலம் திருச்சூரில் இருந்தது. அந்த முகவரிக்குரிய நபரை அழைத்து போலீசார் விசாரித்ததில் அவர், அந்த வீடியோவை தான் ஒரு ஆபாச வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, இணையதளத்தில் வெளியிட்டதாக கூறினார்.

போலீசாரின் தொடர் விசாரணையில் இந்த செயலில் அந்த பெண்ணின் கணவரே ஈடுபட்டது தெரிந்தது. அந்த நபர் தனது மனைவியுடன் படுக்கையறை காட்சியை லேப்டாப் வெப்கேமரா மூலம் படம்பிடித்து ஒரு ஆபாச இணையதளத்துக்கு பணத்துக்காக நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். மனைவி சந்தேகப்படாமல் இருப்பதற்காக அந்த நேரத்தில் லேப்டாப்பில் ஒரு சினிமாவை ஓடவிட்டு இருக்கிறார்.

அவரது லேப்டாப், செல்போன், வங்கி கணக்கு ஆகியவைகள் மூலம் இதற்கான ஆதாரங்களை போலீசார் திரட்டினர். போலீசார் அந்த நபரை கடந்த 7ந் தேதி கைதுசெய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com