உன்னோவில் சிறுமியை பலாத்காரம் செய்த பா.ஜனதா எம்.எல்.ஏ.விற்கு ஆதரவாக பேரணி

கதுவாவை போன்று உன்னோவிலும் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்டு உள்ளது. #Unnao #Kathua
உன்னோவில் சிறுமியை பலாத்காரம் செய்த பா.ஜனதா எம்.எல்.ஏ.விற்கு ஆதரவாக பேரணி
Published on

லக்னோ,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பா.ஜனதா மந்திரிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றது, குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது பா.ஜனதா ஆதரவு வழக்கறிஞர்கள் போராட்டம் மேற்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டு உள்ளார். சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பலாத்கார குற்றவாளிக்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்டு உள்ளது.

பேரணியாக சென்ற பெண்கள் மற்றும் ஆண்கள் எங்களுடைய எம்.எல்.ஏ. குற்றவாளி கிடையாது என கோஷம் எழுப்பி உள்ளனர்.

கதுவாவை போன்றும் உன்னோவிலும் பலாத்கார குற்றவாளிக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிக்காபூர், சாபிபூர், பாங்கார்மானு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு ஆதரவாக பேரணியை மேற்கொண்டு உள்ளனர். இவ்வழக்கில் அனைத்தும் எம்.எல்.ஏ.விற்கு எதிரான சதிதிட்டமாகும் என அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பஞ்சாயத்து தலைவர் அனுஜ் குமார் தீட்ஷித் பேசுகையில், எங்களுடைய எம்.எல்.ஏ.விற்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற சதிதிட்டம்தான் இது. மோசடியான குற்றச்சாட்டில் அவர் சிக்கவைக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், என கூறிஉள்ளார்.

கதுவாவை போன்று உன்னோவிலும் பலாத்கார குற்றவாளிக்கு ஆதரவாக பேரணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடைய சகோதரர் கடந்த ஜூன் மாதம் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர். சிறுமி, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்னதாக தீக்குளிக்க முயன்ற போதுதான் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com