

புதுடெல்லி,
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிற உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன 4-ந்தேதி சிறுமி ஒருவரை ஒரு கும்பல் கற்பழித்து உள்ளது. இது தொடர்பாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டவர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளான பெண்ணின் தந்தை தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதிலும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மீது புகார் எழுந்து உள்ளது. இந்த நிலையில் ஜூன் 11 மற்றும் ஜூன் 20, 2017-க்கு இடையில் வேறு ஒரு குழுவால் அந்த பெண் மீண்டும் கற்பழிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது பாதிக்கப்பட்ட பெண் அவரது தாய் மற்றும் மாமா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்டவர் சிறுமி என அவரது தாயாரும், மாமாவும் போலி ஆவணங்கள் கொடுத்ததாக போலீசார் கூறி உள்ளனர். 419, 420, 468 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 23-ந்தேதி உன்னோவ் மாஹி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹரிபால் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூர் நீதிமன்றத்திற்கு இந்த உத்தரவு வந்தது.
சிங்கின் மனைவி சஷி மற்றும் மகன் ஷுப்ஹம் ஆகியோர் கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருடன் சேர்ந்து ஏப்ரல் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அவதேஷ் திவாரி என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார், செப்டம்பர் 2017-ல் அவருடன் ஓடி விட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஹரிபாலின் மகன் ஷுப்ஹமை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். ஷுப்ஹம் திருமணம் செய்து கொள்ள மறுத்தபோது பெண்ணின் குடும்பத்தினர் கடத்தல் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ ) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறந்த தேதி மாற்றப்பட்டு உள்ளது. அதற்கு ஆதாரமாக ரேபரேலியிலுள்ள பள்ளியில் இருந்து ஒரு சான்றிதழை கொடுத்து உள்ளனர். அதில் மாவட்டத்தின் அடிப்படை சிக்ஷா அதிகாரி மற்றும் பள்ளி முதலவர் கையெழுத்து இருந்தது. அது தங்கள் கையெழுத்து இல்லை என இருவரும் கூறி உள்ளனர்.