

புதுடெல்லி,
சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கில் அவர், நாட்டில் 50 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்களுக்கு குறைந்தபட்ச கூலிகளை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க மறுத்து விட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை. உங்கள் மனக்குறைகளை அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லலாம் என குறிப்பிட்டனர்.