மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் நாபன்னா எனப்படும் மாநில தலைமைச்செயலகம் அமைந்திருக்கிறது. முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட மந்திரிகளின் அலுவலகங்கள் இங்கு உள்ளன. துர்கா பூஜை விடுமுறை காரணமாக தலைமைச்செயலகம் நேற்று மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தலைமைச்செயலகத்தின் 14-வது மாடியில் நேற்று பகல் 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடன் 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. ஒரு தொலைபேசி கோபுர சாதனத்தில் இருந்து தீ பற்றியிருக்கிறது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com