உ.பி.: கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; 6 பேர் கதி என்ன?

உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிக்கி கொண்ட 14 பேரில், 8 பேர் மீட்கப்பட்டனர்.
உ.பி.: கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; 6 பேர் கதி என்ன?
Published on

மீரட்,

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் ஜாகீர் காலனி பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 14 பேர் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படை குழுவினர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.

அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், நள்ளிரவு வரையிலான மீட்பு பணியில், 8 பேர் மீட்கப்பட்டனர். எனினும், அவர்களில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். மீதமுள்ள 6 பேரை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com