உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் காயம்!

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ஒரு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், நான்கு பேர் காயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் காயம்!
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ஒரு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், நான்கு பேர் காயம் அடைந்தனர். இன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது.

விபத்து குறித்த தகவலறிந்ததும், தீயணைப்பு படையினர் அங்கு சென்றனர். அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது எனவும் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் இந்திரா விக்ரம் சிங் கூறுகையில், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இடிந்து விழுந்த மேற்கூரை பலவீனமான கட்டிடத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்த கட்டிடத்தின் உள்ளே ஒரு குடோன் இருந்தது. அங்கு எந்த குடும்பமும் வசிக்கவில்லை.

சம்பவம் நடந்த போது நான்கு பேர் சில பொருட்களை எடுத்து செல்ல குடோன் உள்ளே சென்றனர். அப்போது மேற்கூரை இடிந்து விழுந்தது. அதில் அவர்கள் நால்வரும் காயம் அடைந்தனர், உடனே தகவலறிந்து மீட்புப்பணிகள் விரைவிபடுத்தப்பட்டன.அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உடல்நிலை சீராக உள்ளது.

நான்கு புல்டோசர்கள், ஆறு ஆம்புலன்ஸ்கள், ஒரு மருத்துவர் குழு, மற்றும் போலீஸ் மற்றும் தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com