உ.பி: சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் பலி

சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
உ.பி: சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் பலி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் குஷால்பூர் முண்ட்கா கிராமத் தில் 6 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அவனைக் காணவில்லை. அவனது குடும்பத்தினரும், கிராம மக்களும் இரவு முழுவதும் அவனை தேடினர்.

இதற்கிடையே, அவனது உடல், கிராமத்தில் இருந்து 400 கி.மீ. தூரத்தில் கரும்பு வயலில் கிடந்தது. அவனை சிறுத்தை இழுத்துச்சென்று கடித்துக் கொன்றிருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளை வெளியே தனியாக விட வேண்டாம் என்று கிராம மக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com