உ.பி.: சிலை கரைப்பின்போது மின்சாரம் தாக்கி 9 சிறுவர்கள் காயம்


உ.பி.:  சிலை கரைப்பின்போது மின்சாரம் தாக்கி 9 சிறுவர்கள் காயம்
x

இந்த விபத்து மின்சார துறையின் அலட்சியத்தினால் நடந்துள்ளது என கிராம மக்கள் குற்றச்சாட்டாக கூறினர்.

லக்னோ,

வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விஜயதசமி கொண்டாட்டங்கள் நடந்தன. இதில், உத்தர பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தின் லோதன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக துர்க்கை சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிலைகளை கரைப்பதற்காக சிலர் வாகனம் ஒன்றில் சென்றனர். அப்போது, அவர்களுடைய வாகனம் அதிக மின்னழுத்தம் கொண்ட மின் கம்பியுடன் உரசி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், அந்த வாகனத்தில் பயணித்த 9 சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர்கள் கடுமையாக காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் லோதன் முதன்மை சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களுடைய தீவிர தன்மையை கவனத்தில் கொண்டு சி மருத்துவ கல்லூரிக்கு அனைவரையும் கொண்டு செல்லும்படி டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ. ஷியாம் தானி ரஹி, மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜா கணபதி உள்ளிட்டோர் காயமடைந்த நபர்களை நேரில் சந்தித்தனர். அவர்களுடைய குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறினர். இந்த சம்பவத்தில், முன்பே பலமுறை கூறியும் மின்சார துறையின் அலட்சியத்தினால், இந்த விபத்து நடந்துள்ளது என கிராம மக்கள் குற்றச்சாட்டாக கூறினர். மின் வடம் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தொங்கி கொண்டிருக்கிறது என்றும் அதனை உயரே கொண்டு செல்லும்படி பலமுறை புகாராக தெரிவித்தோம். ஆனால், அதனை அலட்சியப்படுத்தி விட்டனர் என கூறினர்.

1 More update

Next Story