உ.பி. சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
உ.பி. சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ-ஹர்தோய் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் ராணுவ வீரர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த கார் பகுலியில் உள்ள கஜுர்மாய் என்ற பகுதி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது அதிபயங்கரமாக மோதியது. இதில் ராணுவ வீரர் மற்றும் அவரது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் அவரது மனைவி படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த ராணுவ வீரரின் மனைவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் ரேபரேலியில் உள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வந்த ராஜா சிங் (34), அவரது மகன் பிரதாப் சிங் எனவும் காயமடைந்தவர் ரிஷி சிங் (32) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com