உத்தர பிரதேசத்தில் கல்வி அதிகாரியிடம் மோதலில் ஈடுபட்டு கீழே தள்ளி விட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.

உத்தர பிரதேசத்தில் கல்வி அதிகாரியிடம் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் மோதலில் ஈடுபட்டு கீழே தள்ளி விட்ட வீடியோ வைரலாகிறது.
உத்தர பிரதேசத்தில் கல்வி அதிகாரியிடம் மோதலில் ஈடுபட்டு கீழே தள்ளி விட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.
Published on

பல்லியா,

உத்தர பிரதேசத்தின் பல்லியா நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங் மற்றும் அக்கட்சியின் சில தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், மாவட்ட பள்ளி ஆய்வாளர் நரேந்திர தேவ் பாண்டேவுடன் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மோதலில் ஈடுபட்டார். இந்த காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது. அவரை நோக்கி எம்.எல்.ஏ. செல்வதும், அதிகாரியை மற்றொரு பாரதீய ஜனதா தலைவர் தள்ளி விடுவதும் வீடியோ காட்சிகளில் உள்ளன.

எனினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட மாஜிஸ்திரேட் பவார் சிங் கர்காவத் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். அவர் கூறும்பொழுது, அந்த அதிகாரி ஒருவருக்கும் பயப்படவில்லை. அதனால் எம்.எல்.ஏ. மற்றும் பிறர் ஆத்திரமடைந்தனர் என கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பின் நடந்த செயலுக்காக எம்.எல்.ஏ. வருத்தம் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com