உத்தர பிரதேசத்தில் 50க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழப்பு: யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவு

உத்தர பிரதேசத்தில் கோசாலையில் 50 க்கும் மேற்பட்ட பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் 50க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழப்பு: யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவு
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்புர் பகுதியில் உள்ள கோசாலைகளில் பராமரிக்கப்படும் பசு மாடுக்ளில் 50 க்கும் மேற்பட்டவை அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தன. இது குறித்த தகவல் அறிந்த உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்விவகாரம் தொடர்பாக வெளியிட்ட டுவிட் பதிவில் "கால்நடைத்துறை அமைச்சரை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செல்லுமாறு யோகி ஆதித்யநத் உத்தரவிட்டுள்ளார். உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள மாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யாரேனும் தவறு செய்தது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com