உ.பி. முதல்-மந்திரி யோகி பயணித்த விமானத்தில் கோளாறு; அவசர அவசரமாக தரையிறக்கம்

உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
உ.பி. முதல்-மந்திரி யோகி பயணித்த விமானத்தில் கோளாறு; அவசர அவசரமாக தரையிறக்கம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத். இதனிடையே, மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை விமானம் மூலம் லக்னோவுக்கு புறப்பட்டார்.

ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் உடனடியாக ஹிரியா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பின்னர், கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதே விமானத்தில் லக்னோ புறப்பட்டு சென்றார். விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டபோது முதல்-மந்திரி யோகி உள்பட யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com