உ.பியில் 2 சாதுக்கள் கொலை: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரபிரதேசத்தில் 2 சாதுக்களை கொலை செய்த குற்றவாளிகளை அடுத்த 48 மணி நேரத்தில் கைது செய்ய போலீசாருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்
உ.பியில் 2 சாதுக்கள் கொலை: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவு
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் பிதுனா என்னும் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவில் வளாகத்திற்குள் நேற்று புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்த 3 சாமியார்களை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த சாமியார்கள் லஜ்ஜா ராம் (வயது 65), ஹல்கே ராம் (53) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். ராம்ஷரண் (56) என்ற மற்றொரு சாமியார் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் காட்டுத்தீ போல் மாநிலம் முழுவதும் பரவியது. இந்த நிலையில் பிதுனா நகரில் ஒரு கும்பல் பயங்கர வன்முறையில் ஈடுபட்டது. குறிப்பிட்ட சில கடைகளை அந்த கும்பல் தீவைத்து கொளுத்தியது. மேலும் அந்த கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதலும் நடத்தியது. இதனால், அவர்களை விரட்டியடிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அங்கு கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேலும் இக்கொலை சம்பவம் குறித்து கான்பூர் இன்ஸ்பெக்டர் அலோக் சிங் கூறுகையில், இங்கு பசுக்களை கொலை செய்யும் சம்பவம் நடைபெற்றது. இதற்கு கோவில் சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக எல்லா கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் எனக் கூறினார்.

இந்நிலையில் சாமியார்களை கொலை செய்த குற்றவாளிகள் போலீஸ் கண்காணிப்பாளர் ஓ பீ சிங் மற்றும் பிரதான செயலாளர் அரவிந்த் குமார் ஆகியோரால் அடையாளம் காணப்பட்டு அடுத்த 48 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட சாமியார்கள் இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவருக்கு ரூ.1 லட்சமும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com