ரக்சாபந்தன் தினம்: பெண்களுக்கு 2 நாட்கள் இலவச பேருந்து பயண திட்டம்- யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

2 நாட்களுக்கு பெண்கள் அரசு பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

லக்னோ,

ரக்சாபந்தன் தினம் ஆண்டுதோறும், சகோதரர் மற்றும் சகோதரியின் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்சாபந்தன் தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், உத்தர பிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஆகஸ்ட் 10 நள்ளிரவு தொடங்கி ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.

இதை தவிர அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் 60 வயதிற்கு மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com