திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

இதனிடையே காதல் ஜோடி திருமணம் செய்துகொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மகாராஜ்கஞ்ச் மாவட்டம் பாகிராத் ரெயில் நிலையத்திற்கு நேற்று சென்ற காதல் ஜோடி தண்டவாளத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ரெயில்வே போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com