

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு தன்னுடைய மூன்றாவது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. 2019-20-ம் ஆண்டுக்கான ரூ.4.79 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ராஜேஷ் அகர்வால் தாக்கல் செய்தார். இது கடந்த ஆண்டு பட்ஜெட்டைவிடவும் 12 சதவீதம் அதிகமாகும். இந்த பட்ஜெட்டில் மாநிலத்தில் கோசாலைகளை பராமரிக்க ரூ. 647 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பசு பாதுகாப்பு மையங்களை பராமரிக்க ரூ.247. 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்புற பகுதிகளில் பசு பாதுகாப்பு மையங்களை சுத்தமாக பராமரிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.