பெற்றோர்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனை பார்க்க சென்ற இளம் பெண் தலை துண்டித்து கொலை

பெற்றோர்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனை பார்க்க சென்ற இளம் பெண்ணின் தலையை தனியாக வெட்டி எடுத்ட்து கொலை செய்துள்ளார் தந்தை
பெற்றோர்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனை பார்க்க சென்ற இளம் பெண் தலை துண்டித்து கொலை
Published on

மீரட்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் லிசாடி கேட் அருகே இளம் பெண் ஒருவரின் தலையில்லா உடலை போலீசார் கண்டெடுத்தனர்.இளம் பெண்ணின் லிசாடி கேட் அருகே மற்றும் சர் பிரம்மபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாய்க்காலில் வீசப்பட்டு இருந்தது. கொலை செய்யபட்ட இளம்பெண் ஷாலிமார் கார்டனில் வசிக்கும் சானியா ரிஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இளம்பெண்ணின் தலையையும் தற்போது கைப்பற்றி உள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சானியா ரிஹான்( வயது 20) சானியா தனது குடும்பத்துடன் ரிஹான் கார்டனில் வசித்து வந்தார்.அதே பகுதியை சேர்ந்த வாசிம்என்ற வாலிபரை சானியா காதலித்து உள்ளார்.வாசிமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினரின் வற்புறுத்தி வந்தார். இதற்கு சானியாவின் பெற்றோர்கள் ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

வாசிமை சந்திக்க சானியா அடிக்கடி குடும்ப உறுப்பினர்களுக்கு டீயில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து வந்து உள்ளார். சம்பவத்தன்று இரவு சானியா, வாசிமை சந்திக்க செல்ல பெற்றோர்களுக்கு டீயில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து உள்ளார். ஆனால் சந்தேகத்தின் பேரில் தாயார் அன்று இரவு டீ குடிக்கவில்லை.

இரவு 2 மணியளவில் அனைவரும் தூங்கிவிட்டார்கள் என எண்ணி சானியா வாசிமை சந்திக்க செல்ல தொடங்கினார். தாயார் அவரை பிடித்துகொண்டார். தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சானியாவின் தந்தையும் தாயாரும் சேர்ந்து சானியாவை கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர். பின்னர் உடலையும் தலையையும் வெவ்வேறு இடங்களில் போட்டு உள்ளனர்.

50 வயதான ஷாஹித் குரேஷி தனது சொந்த மகளின் தலையை துண்டித்ததற்கு எந்த வருத்தமும் இல்லை என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com