

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் உக்ரசென் குமார் ஜெய்ஸ்வால். இவருக்கும்.ராஸ்ரா பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தாம் வனத்துறை அதிகாரி என்பதால் காட்டை முழுவதுமாக சுற்றி காட்டுவதாகவும் இயற்கை காட்சிகளை படம் பிடிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஜெய்ஸ்வால் உறுதியளித்துள்ளார். அந்த பெண்ணுடன் கடந்த 6 மாதங்களாக அவர் அடிக்கடி தனிமையில் இருந்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த இளம்பெண் திருமணத்தைப் பற்றி கேட்டபோது, ஜெய்ஸ்வால் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வனத்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.