

லக்னோ,
உத்தரபிரதேசத்தில், அலிகார் கள்ளச்சாராயம் குடித்ததில் சுமார் 50 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் வந்தது.
இதையடுத்து தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்தில் கலால் வரி கமிஷனர்கள் 2 பேர் உள்பட கலால் வரித்துறையை சேர்ந்த 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர்கள் உள்பட 7 பேரும் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய கிராமத்தினர் 17 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.