

கோரக்பூர்,
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்நாத் கோவிலின் தலைமை பூசாரியாகவும் உள்ளார். அவர், கோரக்பூர் நகருக்கு நேற்று 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன்பின் நேற்று மகாநிஷா உள்ளிட்ட பூஜைகளை வேத மந்திரங்கள் முழங்க அவர் மேற்கொண்டார்.
2 மணிநேரம் நடந்த இந்த சடங்கில் தொடர்ச்சியாக பூஜைகளை செய்து, மனிதநலன்களுக்காக அவர் வேண்டி கொண்டார். இதனை தொடர்ந்து நவராத்திரியின் 9-ம் நாளான இன்று அவர் கன்னி பூஜையை மேற்கொண்டார்.
இதன்படி, வந்திருந்த குழந்தைகள் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். வேத மந்திரங்கள் உச்சரித்து கன்னி பூஜை செய்த முதல்-மந்திரி, குழந்தைகளுக்கு பல்சுவையான விருந்து படைத்துள்ளார். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் சிறிய சால்வை போர்த்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இனிப்புகள், பழச்சாறு உள்ளிட்ட பலகாரங்கள் வினியோகிக்கப்பட்டன.