இரவில் நாகினியாக மாறி உஷ்..உஷ்.. என சத்தம் ; மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்


இரவில் நாகினியாக மாறி உஷ்..உஷ்.. என சத்தம் ; மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 7 Oct 2025 2:54 PM IST (Updated: 7 Oct 2025 4:15 PM IST)
t-max-icont-min-icon

பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க .மறுத்ததாக மெராஜ் குற்றம்சாட்டி உள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மஹ்முதாபாத்தில் உள்ள லோதாசா கிராமத்தை சேர்ந்தவர் மெராஜ். அக்4-ம் தேதி சீதாபூர் மாவட்ட கலெக்டர் அபிஷேக் ஆனந்த் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

அப்போது மெராஜ் என்பவர் ஒரு வித்தியாசமான கோரிக்கையை கலெக்டரிடம் முன் வைத்தார். இதனை கண்ட அதிகாரிகள் திகைத்து போயினர். .எனது மனைவி நசிமுன் இரவு நேரத்தில் நாகினி போல் மாறி உஷ்.. உஷ்.. என்று சத்தம் போட்டு என்னை பயமுறுத்தி வருகிறார். இதனால் என்னால் இரவில் நிம்மதியாக கூட தூங்க முடியவில்லை. பலமுறை மன்றாடியும், உள்ளூர் போலீசார் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் உதவிக்காக மாவட்ட நிர்வாகத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள் வித்தியாசமான புகாரால் திகைத்து போயினர். இருப்பினும் மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். எங்களுக்கு இது குறித்து புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story