

காசியாபாத்,
தற்போது பலருக்கு உடல்நிலை ஆரோக்கியமானதாக இல்லை என்பதால் பாலியல் உணர்ச்சிகளை அதிகரிக்கக்கூடிய ஊக்க மாத்திரைகளை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த பாலியல் மாத்திரைகளை பயன்படுத்தினார்கள். இதனாலேயே வயாகரா மாத்திரைகள் உலக அளவில் அதிக அளவு விற்பனையானது.
ஆனால் சிலர் ஆர்வக்கோளாறில் தனது உடல் நிலையை பற்றி தெரிந்து கொள்ளாமல் அளவுக்கு அதிகமான ஊக்க மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனைக்கு செல்வதுண்டு. இந்நிலையில்தான், காதலியுடன் விடுதியில் உல்லாசமாக இருப்பதற்காக பாலில் ஊக்க மருந்தை அதிகமாக கலந்து குடித்த வாலிபர் மரணமடைந்த சம்பவம் காசிபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காசியாபாத்தை சேர்ந்த அஜய் என்கிற இளைஞர் தன் காதலியுடன் விடுதி ஒன்றில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார். அப்போது அவர் ஊக்க மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. அதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்தார். இதனால் பயந்துபோன காதலி
இளைஞரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார், அவர் இறந்ததை அறிந்ததும் தப்பி ஓடி விட்டார். ஊக்க மாத்திரைகளை அதிகளவில் எடுத்துக் கொண்டதால் இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தப்பி ஓடிய காதலியை உத்தர பிரதேச போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.