கணவன்-மனைவி சண்டையில் குறுக்கிட்டதால் ஆத்திரம்: தாயை ஈட்டியால் குத்திக் கொன்ற மகன்


கணவன்-மனைவி சண்டையில் குறுக்கிட்டதால் ஆத்திரம்: தாயை ஈட்டியால் குத்திக் கொன்ற மகன்
x

கோப்புப்படம் 

கணவன்-மனைவி சண்டையில் குறுக்கிட்டதால் ஆத்திரமடைந்த மகன், தாயை ஈட்டியால் குத்திக் கொன்றுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள கணபத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் (25 வயது). இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் வசித்து வந்தார். வினோத் குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த வினோத் குமார், மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது மனைவியை தாக்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர்களின் சண்டையில் வினோத் குமாரின் தாயார் நைனா தேவி (60 வயது) தலையிட்டு உள்ளார். மருமகளுக்கு ஆதரவாக பேசிய அவர், வினோத் குமாரை கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வினோத் குமார், அருகில் இருந்த ஈட்டியை எடுத்து, போதை தலைக்கேறிய நிலையில் தாயென்றும் பாராமல் சரமாரியாக குத்தினார்.

இதில் நைனாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, நைனாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். வினோத் குமாரை கைது செய்தனர்.

1 More update

Next Story