உத்தரபிரதேசத்தில் பாலியல் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவருக்கு விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் பாலியல் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
Published on: 

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாசில் என்பவர் கடந்த மே மாதம் 6 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது நாசில் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு தற்போது அவருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரபிரதேச விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com