உத்தர பிரதேசத்தில் மகளை ஈவ் டீசிங் செய்தவர்களை தடுத்த 65 வயது தந்தை சுட்டுக் கொலை

உத்தர பிரதேசத்தில் மகளை ஈவ் டீசிங் செய்தவர்களை தடுத்த 65 வயது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் மகளை ஈவ் டீசிங் செய்தவர்களை தடுத்த 65 வயது தந்தை சுட்டுக் கொலை
Published on

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தில் முசாபர்நகரில் ராம்புரி பகுதியில் வசித்து வந்த 65 வயது தந்தை தனது மகளுடன் வெளியே சென்றுள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணபால் மற்றும் விஷால் ஆகிய 2 பேர் முதியவரின் மகளிடம் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை கண்ட அந்த தந்தை 2 இளைஞர்களையும் தடுத்துள்ளார். ஆனால் அவர்கள் தங்களிடம் வைத்திருந்த துப்பாக்கியால் முதியவரை சுட்டுள்ளனர். பின் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த தாக்குதலில் முதியவர் குண்டு காயங்களுக்கு பலியாகி விட்டார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com