உ.பி.: கர்ப்பிணி மருமகள் பலாத்காரம்... மாமனார் வெறிச்செயல்; கணவர் அளித்த அதிர்ச்சி பதில்

உத்தர பிரதேசத்தில் கணவர் வெளியே சென்றபோது கர்ப்பிணி மருமகளை மாமனார் பலாத்காரம் செய்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
உ.பி.: கர்ப்பிணி மருமகள் பலாத்காரம்... மாமனார் வெறிச்செயல்; கணவர் அளித்த அதிர்ச்சி பதில்
Published on

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மீராப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கந்தர்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தபசும் (வயது 20). முதசீர் என்பவருக்கும் தபசுமுக்கும் 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் திருமணம் நடந்தது.

அப்போதிருந்து, தபசும் மீது மாமனார் இஸ்திகார் காமப்பார்வை பார்த்து வந்துள்ளார். கெட்ட நோக்குடனேயே அவரை அணுகியுள்ளார் என தபசும் குற்றச்சாட்டு கூறுகிறார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 5-ந்தேதி முதசீர், மீராப்பூரில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் காட்டுவதற்காக தாயாரை அழைத்து சென்றுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, இஸ்திகார் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதன்பின்பு மாலையில், கணவரும், மாமியாரும் வீடு திரும்பி உள்ளனர். அப்போது, கணவரிடம் நடந்த விசயங்களை தபசும் கூறியுள்ளார். இதனை கேட்ட முதசீர், மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். இனி எந்தவித உறவும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

அதன்பின்னர் அவர் கூறிய விசயங்களை கேட்டு தபசும் அதிர்ந்துள்ளார். அந்த நபர் மனைவியிடம், நீ என்னுடைய தந்தையின் மனைவியாகி விட்டாய். அதனால், எனக்கு தாயாராகி விட்டாய். அதனால், தன்னுடன் ஒன்றாக வசிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதன்பின்பு, கணவரும், மாமியாரும் சேர்ந்து தபசுமை அடித்து, உதைத்து, வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர். இந்த நடவடிக்கைகளால் மிரண்டு போன தபசும் யாரிடமும் எதுவும் கூறாமல் தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பின்னர், தபசும் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போலீசில் புகார் அளித்தனர்.

அதில், கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோருக்கு எதிராக நீதி கேட்டு புகார் அளிக்கப்பட்டது. இஸ்திகாருக்கு எதிராக பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவானது. இந்த வழக்கு பற்றி போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com