உத்தரபிரதேசத்தில் ஒரே ஊசியை பயன்படுத்தியதால் 40 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு

உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் ஒரே ஊசியை பயன்படுத்தியதால் 40 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. #Tamilnews #HIVPositive
உத்தரபிரதேசத்தில் ஒரே ஊசியை பயன்படுத்தியதால் 40 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு
Published on

உன்னோவ்

உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் 40 பேருக்கு எய்ட்ஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்க தொற்று நோய் உள்ள ஊசியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

பல டிரக் டிரைவர்கள் மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுக்கும் பகுதியாகும் . அதனால் சம்பந்தபட்டவர்களூக்கு எய்ட்ஸ் கிருமிகள் தொற்றி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர் சுனில் பாங்காரூ கூறும் போது முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் குறைந்தபட்சம் 500 எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பார்கள் என கூறி உள்ளார்.

"இதுவரை 40 பேருக்கு எச்ஐவி கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் குறைந்தபட்சம் 500 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருக்கலாம் . இங்கு மக்கள் நோய்களுக்கான சிகிச்சையினை குணப்படுத்துவதற்கு ஒரே ஊசிய பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது என கூறினார்.

இப்போது, சுகாதார முகாம்கள் எய்ட்ஸ் பரவுவதை குறைக்க உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

"எய்ட்ஸ் கிருமிகள் தொற்று உள்ளது உறுதியானதால் நாங்கள் சுகாதார முகாம்களை அமைத்துள்ளோம், மேலும் நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம்" என்று சமூக சுகாதார மைய மருத்துவ மேற்பார்வையாளர், பிரமோத் குமார் கூறினார்.

உத்தரப்பிரதேச சுகாதார அமைச்சர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.

"இது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எச்ஐவி தொற்று உள்ள வாகன ஓட்டுனர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என "சித்தார்த் நாத் சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com