கிரிக்கெட் விளையாடியதும் தண்ணீர் குடித்த சிறுவன்... மாரடைப்பால் உயிரிழப்பு...?

கிரிக்கெட் விளையாடிவிட்டு சிறுவன் குளிர்ந்த நீரை அருந்திய நிலையில் உடனே மயங்கி விழுந்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடியதும் தண்ணீர் குடித்த சிறுவன்... மாரடைப்பால் உயிரிழப்பு...?
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு தண்ணீர் குடித்த 17வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹசன்புர் அருகே உள்ள காயஸ்தான் பகுதியை சேர்ந்த சிறுவன் பிரின்ஸ் சைனி (வயது 17). அவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

கிரிக்கெட் விளையாடிவிட்டு சிறுவன் குளிர்ந்த நீரை அருந்திய நிலையில் உடனே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com