உ.பி.யில் அவலம்: கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான காது கேளாத, வாய் பேச முடியாத இளம்பெண் தற்கொலை

வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.
உ.பி.யில் அவலம்: கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான காது கேளாத, வாய் பேச முடியாத இளம்பெண் தற்கொலை
Published on

காசியாபாத்,

உத்தர பிரதேச மாநிலத்தில், காசியாபாத் மாவட்டத்தில் 23 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கடந்த 18-ந்தேதி கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தது.

இதில் பலத்த பாதிப்படைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை நிறைவடைந்து அவர் நேற்றிரவு ஊருக்கு திரும்பினார்.

அப்போது அவர், லோனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில், வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.

இதுபற்றி டி.சி.பி. சுரேந்திர நாத் திவாரி கூறும்போது, கம்பளி விற்கும் நபரின் மகளான அவர், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என அவருடைய தந்தை புகார் தெரிவித்து உள்ளார். இதன்பேரில் எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது.

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சம்பவம் தொடர்ச்சியாக ரோகித் (வயது 23) மற்றும் போலா (வயது 45) என 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய 3-வது குற்றவாளியை பிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லோனி காவல் நிலையத்திற்கு முன்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் பல்வேறு ஆர்வலர்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் அவர்களிடம் உறுதியளித்தனர்.

கடந்த 14-ந்தேதி உத்தர பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொத்வாலி திஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் ஒருவர், மாமா வீட்டுக்கு சென்று விட்டு திரும்பினார்.

அப்போது, இரவில் அவரை 5 பைக்குகளில் விரட்டி சென்ற ஒரு கும்பல் பின்னர் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது. அதற்கடுத்த 4 நாட்களில் நடந்த இந்த சம்பவத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது, அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com