

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் பிர்ஹட் கிராமத்தை சேர்ந்த இளைஞர் பொலொ கான். இவருக்கு திருமணமாகி பனா என்ற மனைவி உள்ளார். இதனிடையே கணவன் - மனைவி அவ்வப்போது குடும்ப பிரச்சினை நிலவி வந்தது.
இந்நிலையில், பொலொ கானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று முன் தினம் இரவு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பொலொ கான் தனது மனைவி பனாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
மேலும் ஆத்திரமடங்காத பொலொ கான் தனது மனைவியின் மூக்கை கடித்து துப்பினார். மனைவியின் கழுத்தையும் கடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த பனாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.