

உத்தரபிரதேசத்தின் சம்பால் கிராமத்தை சேர்ந்தவர் ரூபி (வயது 18), இவர் இப்ராஹிம் என்னும் இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று ரூபி தனது காதலர் இப்ராஹிமுடன் தனியாக நின்று பேசிக்கொண்டிருந்தார்.
இதை பார்த்த ரூபியின் சகோதரி இதுகுறித்து தனது தந்தை சம்ரோஸ் மற்றும் சகோதரர் இப்திகர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த இருவரும், நேராக ரூபியிடம் சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர் மார்பிலும், முகத்திலும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
பின்னர் ரத்த வெள்ளத்தில் தனது வீட்டு வாசலில் அழுது கொண்டிருந்த ரூபியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு ரூபியை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
தற்போது ரூபிக்கு தீவிர சிகிச்சையளிக்கபட்டு வரும் நிலையில், தன் குடும்பம் சம்மதிக்காவிட்டாலும் தான் இப்ராஹிமை தான் மணப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையில், ரூபியின் சகோதரர் இப்திகரின் மனைவி கூறுகையில், எங்கள் குடும்பத்தை ரூபி அவமானப்படுத்தி விட்டாள்.
தன் காதலருடன் தான் செல்வேன் என பிடிவாதம் பிடிக்கிறார். இதற்குபதில் அவள் உயிரிழந்து விடலாம் என கூறியுள்ளார்.