உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கவுன்சிலர் கைது

புதுப்பெண்ணை கடத்தியதாக புகாரில் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கவுன்சிலர் கைது
Published on

உப்பள்ளி;

உப்பள்ளி கோகுல் ரோட்டில் வசித்து வருபவர் நிகில் (வயது 26). இவரும் அதேப்பகுதியை சேர்ந்த சகானா (21) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால், அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி நிகிலும், சாகானாவும் கோவாவுக்கு சென்று திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சகானாவை அவரது பெற்றோர், உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கவுன்சிலர் சீத்தன் என்பவர் உதவியுடன் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் தனது மனைவியை கவுன்சிலர் சீத்தன் கடத்தி சென்றுவிட்டதாக நிகில் கோகுல்ரோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண்ணை கடத்தியதாக கவுன்சிலர் சீத்தனை கைது செய்தனர்.

மேலும் பெற்றோர் வசம் இருந்த சகானாவை போலீசார் மீட்டு நிகிலுடன் சேர்த்து வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com